கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர். இந்நிலையில் ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் ஆடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்திலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
Categories