கர்நாடக மாநிலத்தில் வயிற்று வலி என்று சிகிச்சைக்காக வந்த முதியவரின் வயிற்றில் 187 நாணயங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த திம்மப்பா ஹரிஜன் என்ற நபருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 60 வயதான இந்த முதியவர் கடுமையான குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் நாளடைவில் இவருக்கு போதை பழக்கம் குடிநோயாக மாறிய நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டார்.
அதனால் இவர் தினம் தோறும் நாணயங்களை விழுங்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கடுமையான வயிற்று வலியால் துடைத்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அவரின் வயிற்றில் நாணயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு 1.2 கிலோ எடைக்கு சுமார் 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றினர். அவரின் வயிற்றில் 56 ஐந்து நாணயங்களும், 51 இரண்டு ரூபாய் நாணயங்களும், 80 ஒரு ரூபாய் நாணயமும் இருந்துள்ளது. அந்த முதியவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.