மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிங்கேஷ் ஷர்வானி(30). இவர் வேளாண் துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடன் அதே அலுவலகத்தில் பணியாற்றும் 50 வயது பெண் ஒருவர் ஒருதலையாக இவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண் கத்திமுனையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ரிங்கேசை கடத்தி மயக்க மருந்து கொடுத்து கட்டாய தாலி கட்ட வைத்துள்ளார். இதுகுறித்து ரிங்கேஷ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜபல்பூர் காவல்துறைக்கு விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
Categories