மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாக் சாக்கோ. இவர் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் ஷைன் டாக் சாக்கோ தற்போது பாரத சக்சஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்காக துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது நடுவானில் விமானிகள் அறையைத் திறந்து அத்துமீறி உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.
இதைப் பார்த்த விமானிகள் நடிகர் ஷைன் டாக் சாக்கோ விசாரித்தபோது போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட வந்ததாக கூறியுள்ளார். இதன் காரணமாக துபாய்க்கு விமானம் சென்றதும் நடிகர் ஷைன் டாக் சாக்கோ உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது நடிகர் சாம் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் நடிகர் ஷைன் டாக் சாக்கோ கடுமையாக எச்சரித்து மீண்டும் கேரளாவிற்கு விமானத்தில் திரும்ப அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.