Categories
இந்திய சினிமா சினிமா

ஷாக்!…. வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த பிரபல நடிகை…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!!

ஒடிசாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் வர்ஷா பிரியதர்ஷினி. இவர் எம்பி அனுபவ் மெகந்தியின் மனைவியும் கூட. அதன் பிறகு நடிகை வர்ஷா பிரியதர்ஷினி மற்றும் அவருடைய உதவியாளர் ஆயுஷி ஆகியோர் மீது புவனேஸ்வர் நகரில் உள்ள சாகித்நகர் காவல் நிலையத்தில் கல்யாண் குமார் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதாவது நடிகை வர்ஷா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகியோர் சேர்ந்து ஒரு நகைக்கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி 30,000 பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்து விட்டதாக கல்யாணகுமார் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் படி நடிகை வர்ஷா மற்றும் ஆயுஷி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆனால் நடிகை வர்ஷா தன் மீதான புகார்களுக்கு மறுப்பு தெரிவித்ததோடு இது சதி வேலை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பிரபல நடிகை மற்றும் எம்.பியின் மனைவி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |