Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி: சாப்பிடும் போது தொண்டையில் உணவு சிக்கி பெண் பரிதாப பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!!!

பொதுவாக சாப்பிடும்போது பொறுமையாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும். எப்போதுமே சாப்பிடுவதற்கு முன்பாக பக்கத்தில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சாப்பிடும் போது திடீரென விக்கல் உள்ளிட்ட ஏதாவது உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும். அதன் பிறகு சாப்பிடும்போது பொறுமையாகவும் கவனமாகவும் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். இதனைடுத்து எப்போதுமே அவசரமாக சாப்பிடக்கூடாது எனவும், டிவி செல்போன் பார்த்தபடி உணவை சாப்பிடக்கூடாது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உணவை மெதுவாகவும், கவனமாகவும் சாப்பிடுவதோடு மென்று பொறுமையாக சாப்பிட வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் பொதுவான அறிவுரை. ஏனெனில் அவசரமாக சாப்பிட்டால் தொண்டையில் உணவு சிக்கி ஏதாவது விபரீதமாக நடந்து விடும். எனவே சாப்பிடும் போது மட்டும் கவனமாக பொறுமையாக சாப்பிட வேண்டும். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காயத்ரி (27) என்ற பெண் அவசர அவசரமாக உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது தொண்டையில் உணவு சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக காயத்ரி உயிரிழந்து விட்டார்.

இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயத்ரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சாப்பிடும் போது தொண்டையில் உணவு சிக்கி ‌ ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |