உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அதன் பிறகு அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே பணியிலிருந்து ஏராளமான ஊழியர்களை நீக்கிய நிலையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த நிலையில், இன்னும் கூடுதலாக 20,000 ஊழியர்கள வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி அடுத்த வருடம் தொடங்கி 6 மாத காலம் வரை பணிநீக்க நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோன்று கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் மொத்த ஊழியர்களில் ஆறு சதவீத ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக 10,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுத்த வருடம் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுவதால் அமேசான் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.