Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் அதிர்ச்சி … ஆடு மேய்பவருக்கு கொரோனா… 50 ஆடுகளுக்கு சோதனை…!!

கர்நாடகத்தில் ஆடு மேய்ப்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மேய்து வந்த ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

கர்நாடகத்தின் துமகுரு மாவட்டம், சிக்கநாயக்கநஹள்ளி என்ற தாலுகாவில் உள்ள கோடேகேர் கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மேய்த்து வந்த வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என பிற விவசாயிகள் மற்றும் கால்நடை மேய்ப்போர் அஞ்சுகின்றனர். ஆனால் கால்நடைகளுக்கு கொரோனா தொற்று பரவாது என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். என்றாலும் மேய்பவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் ஆடுகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆடுகளிடம் இருந்து எடுக்கப்பட்ட சளி மாதிரிகள் பெங்களூருவில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சில மாதிரிகள் போபாலில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஏற்கனவே நியூயார்க்கில் ப்ரோன்ஸ் வனவிலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று பரவியது.நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |