Categories
சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – கோயம்பேடு சந்தை மூலமாக தமிழகம் முழுவதும் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கோயம்பேடு சந்தையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கடந்த 27ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கோயம்பேடு பூக்கடை வியாபாரி ஒருவர், அதனை தொடர்ந்து மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.

மே 1ம் தேதி காலை கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி, கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கிச்சென்று விற்ற 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு சந்தையில் கணக்குப்பிள்ளையாக வேலை செய்த மதுரவாயலை சேர்ந்த இளைஞருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 88ஆக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மூலம் சென்னையில் 50 பேருக்கும், அரியலூர் – 19, கடலூர் – 9, காஞ்சிபுரம் – 7, விழுப்புரம் – 2, பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடலூரில் இதுவரை 27 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 7 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |