சென்னையில் இன்று காலை நிலவரப்படி கொரோனோவால் பாதித்த 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது நபர் இன்று பலியாகியுள்ளார்.
சென்னையில் நேற்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் காலை நிலவரப்படி 12 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சென்னையில் மட்டும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது 434ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 48,019 பேர் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. மேலும் அதன் அருகே இருக்கும் மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் கொரோனா தொற்றானது பரவி வருகிறது. இதனால் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு வரும் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.