ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் பிரபல தொற்றுநோய் நிபுணர் டாக்டர் நரேஷ் புரோகித் வெளியிட்ட சில தகவல்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில் உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் நோய் எதிர்ப்பு திறனிலிருந்து தப்பிக்கும் தன்மை, அதி வேகமாக பரவும் என பல தகவல்கள் வெளியாகி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
ஒருபக்கம் ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் டெல்டாவை விட ஒமிக்ரான் வைரஸ் 70 மடங்கு வேகமாக பரவும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலும் வெளியானது. இந்த நிலையில் தேசிய தொற்றுநோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகரும், பிரபல தொற்றுநோய் நிபுணருமான டாக்டர் நரேஷ் புரோகித் “ஒமிக்ரான்” வைரஸ் தொடர்பில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.
1. டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டது.
2. ஜனவரி மாதத்தில் ஒமிக்ரான் பேரலையாக வீச வாய்ப்புள்ளது.
3. தென்ஆபிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட மூன்றே வாரத்தில் கிட்டத்தட்ட 77 நாடுகளில் வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டது.
4. ஒமிக்ரான் வைரஸ் தீவிர பாதிப்பினை ஏற்படுத்தாது என்றாலும் கூட உலகமெங்கும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு இந்த வைரஸ் பெரும் சவாலாக மாறி காட்டுத்தீ போல பரவி வருகிறது.
எனவே மக்கள் ஒமிக்ரான் வைரஸை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.
5. ஒமிக்ரான் வைரஸ் ஏராளமானோருக்கு பரவுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்த கூடிய மிகக் கொடிய நோயாக இந்த வைரஸ் உருமாறலாம் என்று டாக்டர் நரேஷ் புரோகித் தகவல் தெரிவித்துள்ளார்.