Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில்….. வெளியான அதிர்ச்சி தகவல் …!!

தமிழகத்தில் இன்று மட்டும் 37 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 3,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,185 பேருக்கு நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 76,158ஆக உள்ளது. இன்று மட்டும் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் மொத்த எண்ணிக்கை 85,915ஆக உள்ளது.இன்று மட்டும்  69 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி 1,898 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 59 அரசு, 43 தனியார் என மொத்தம் 102 கொரோனா பரிசோதனை நிலையங்கள் உள்ளது. இன்று மட்டும் 36,628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதால் இதுவரை 15,00,909 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 46,410 பேர் தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சென்னையில் மட்டும் 17,989 பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.இன்று மட்டும் தொற்று பாதிக்கபட்டதில் 58 பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்றும், தமிழகத்தில் கொரோனா பாதித்த 64.01 % பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 37 மாவட்டங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டு, 21 மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை-26

மதுரை-10

காஞ்சி-4

ரா.பேட்டை-3

திருவள்ளூர்-3

தூத்துக்குடி-3

திருச்சி-3

செங்கல்பட்டு-2

கோவை-2

தேனி-2

அரியலூர்- 1

கடலூர் -1

க.குறிச்சி-1

குமரி -1

கரூர் -1

நீலகிரி -1

திருப்பத்தூர்-1

தி.மலை -1

திருவாரூர் -1

நெல்லை -1

விருதுநகர்- 1

Categories

Tech |