Categories
மாநில செய்திகள்

Shocking: ஆவின் பால் பாக்கெட்டுக்குள்…. செத்து கிடந்த தவளை…. மக்கள் அதிர்ச்சி…!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் இருக்கிறது. அப்படி கிடைக்காதவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்குகிறார்கள்.

இப்படி இருக்கையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆவின் பால் பாக்கெட்டுகள் தவளை ஒன்று இறந்து கிடந்ததுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவனேசன் என்வருடைய வீட்டில் ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது அந்த பால் பாக்கெட்டுக்குள் தவளை ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த நிறுவனத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆவின் விற்பனை பிரிவு மண்டல மேலாளர் விசாரணைக்கு கொண்டு வருகிறார். இதுஆவின்பால் வாங்கும்வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |