நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து 2023 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இன்று 2,95,047 பேருக்கு தோற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,56,16,130 ஆகவும், 1,67,457 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 1,32,76,039 ஆகவும் உள்ளது.