கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகள் கொரோனவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து வந்த நிலையில் தற்போது ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒரு சில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின் மோசமான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முந்தைய காலங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசியில் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.