Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…! “சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா”…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…. திணறும் மக்கள்….!!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக 140 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.

அந்த வகையில் சீனாவில் புதிதாக 140 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சீனாவில் 87 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆனால் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிகுறிகள் இல்லாத வைரஸ் பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக கணக்கில் எடுக்க மாட்டார்கள். இதுவரை அறிகுறி இல்லாத கொரோனா தொற்று 24 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சீனாவில் புதிய பாதிப்புகளின் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,871-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையும் 4,636 ஆக உள்ளது.

Categories

Tech |