Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

யாரு செஞ்ச வேலை இது..? கோவிலுக்கு தானே போனோம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

1 1/2 மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எஸ்.கே நகரில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தையல் தொழில் பார்த்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக கடந்த 22ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் வீடு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் பணம், 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு ஜெயராமன் தகவல் தெரிவித்தார். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 1 1/2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |