அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்றைக்கு கோவிலாக பாவித்து கொண்டிருக்கின்ற அந்த கட்டிடத்தில் பிரதான கேட்டை உடைத்து, அங்கு இருக்கின்ற பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் உடைய பெயரே…. எம்.ஜி.ஆர் மாளிகை என்று இருக்கும்.
ஈரம் நெஞ்சம் இல்லாத அரக்க குணம் படைத்தவர்கள்… தங்கள் கைகளால், காலால் உடைத்து அந்த கட்டடத்திற்குள் நுழைகின்றார்கள்அம்மா இருந்த அறை காலால் எட்டி உடைத்து, அந்த அறைக்குள்ளே நுழைந்து, இன்றைக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்கள் அவர்களுடைய ஆதாரங்களை எல்லாம் அழித்துள்ளார்கள். இங்கே வந்துருக்க கூடிய நீங்கள் எப்போது கட்சியில் சேர்ந்தவர்கள், எப்போதெல்லாம் பதவி அடைந்தீர்கள் என்று புரட்சி தலைவர் காலத்தில் இருந்து,
அம்மா காலத்தில் இருந்து இப்போதுவரை அந்த ஆதாரம் எல்லாம் அதில் இருக்கிறது. அதை எல்லாம் எடுத்து தீ வைத்து கொளுத்தி, அறைகளை உடைத்து ஒரு போர்க்களம் போல் அந்த கட்டிடம் காட்சியளிக்கின்றது. மனசாட்சி உள்ள ஒரு மனிதர் அதை தொட முடியுமா ? இன்றைக்கு எட்டி உதைக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் இருக்கின்ற அந்த தலைமை கழகத்தை காலால் எட்டி உதைக்கின்ற போது… 1 1/2 கோடி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நெஞ்சில் உதைப்பதாகும் என தெரிவித்தார்,