Categories
தேசிய செய்திகள்

ஷாக்! ஒரே நாளில் ரூ. 65 லட்சம் கடத்தல்….. 5 பேர் கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்‌…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நர்சிங்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ‌ அப்போது அவ்வழியே சந்தேகப்படும் படியாக 2 கார்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் சென்று கொண்டிருந்தது. இந்த 4 வாகனங் களையும் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 2 கார்களிலும் 35 லட்ச ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இதேபோன்று 2 மோட்டார் சைக்கிள்களிலும் 30 லட்சம் ரூபாய் இருந்துள்ளது.

இந்த பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு, ஸ்ரீகாந்த் சாகர், விஜயகுமார், நாகேஷ், தாசர் லூதர், தேவல் ராஜூ ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் ஒரே நாளில் 65 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |