Categories
தேசிய செய்திகள்

ஷாக்!!… மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட சக மாணவனை தட்டி கேட்ட ராணுவ வீரர் அடித்து கொலை…. பரபரப்பு….!!!!!

குஜராத் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் மகளின் ஆபாச வீடியோவை சக மாணவர் ஒருவர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து மாணவி தன்னுடைய பெற்றோரிடம் தெரிவிக்க எல்லை பாதுகாப்பு படை வீரர், அவருடைய மனைவி மற்றும் 2 மகன்கள் என 4 பேரும் தங்களுடைய மகளுடன் ஒரே பள்ளியில் படிக்கும் அந்த 15 வயது சிறுவனின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதன்பிறகு சிறுவனின் பெற்றோரிடம் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்டதற்கு எல்லை பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்தினர் நியாயம் கேட்க, இரு குடும்பத்தாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் சிறுவனின் குடும்பத்தார் கொடூரமான முறையில் தாக்கியதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை எல்லை பாதுகாப்பு படை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் 2 பெண் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |