இன்றைய நவீன உலகில் ஆடம்பர கார்களின் உற்பத்தி அதிகரித்து வருவதோடு அதை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திறந்த வெளியில் இருக்கும் ஆடம்பர ரக கார்களும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் திறக்கும் போது அது ஜீப் வடிவில் காணப்படும். இப்படிப்பட்ட திறக்கும் ஆடம்பரமான ஜீப்பில் மும்பை மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதிவேகமாக சென்றுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற விபரீதமான செயல்பாடுகளால் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்து விதிமுறைகளையும் மீறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்ததோடு சம்பந்தப்பட்ட இளம் பெண்ணுக்கு போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
Good Morning @MTPHereToHelp
What say about this?Sun Roof is for letting the Sun☀️in & Not the Head out… Isn't it?#RoadSafety#BandraWorliSealink#RoadAccident pic.twitter.com/50u8VFYs5q
— मुंबई Matters™ (@mumbaimatterz) November 10, 2022