அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு மின்கட்டணம் உயர்வு, மின்சாரத்தை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. அதில் பார்த்தீர்கள் என்றால்.. நங்கள் ஒன்றும் அதிகமாக உயர்த்தவில்லை என்று இப்போது இருக்கின்ற மின்சாரத்துறை அமைச்சர் சொல்கிறார். இங்க வருகின்ற நிறைய மக்களுக்கு தெரியாது ? எவ்வளவு மின்கட்டணம் உயர்ந்திருக்கிறது என்று தெரியாது ? ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் சொல்கிறேன்.
திமுக அரசாங்கம் பொறுப்பேற்ற பிறகு கடுமையாக மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது 12 சதவீதத்திலிருந்து, 52 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள். அதில் புள்ளி விவரத்தில், 200 யூனிட் அண்ணா திமுக ஆட்சியில் பழைய கட்டணம் 170 ரூபாய், இப்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிய கட்டணப்படி 275 செலுத்த வேண்டும். 55 ரூபாய் இரண்டு மாதத்திற்குள் செலுத்த வேண்டும், 32 சதவீதம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
300 யூனிட் வரைக்கும் வீட்டிற்கு பயன்படுத்தினால் நம்முடைய ஆட்சியின் போது ரூபாய் 530 பணம் கட்டினால் போதும், இப்போது ரூ.675 புதிய மின் கட்டணம் செலுத்த வேண்டும், 145 ரூபாய் உயர்வு, 27% உயர்த்தப்பட்டிருக்கிறது. 400 யூனிட் வரைக்கும் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பழைய கட்டணம் ரூ. 830, புதிய கட்டணம் 1125 ரூபாய். உயர்த்தப்பட்ட தொகை ரூ.295, உயர்த்தப்பட்ட சதவிகிதம் 36 சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள்.
500 யூனிட் வரைக்கும் வீடுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு அண்ணா திமுக ஆட்சியில் பழைய கட்டணம் ரூ.1130. புதிய கட்டணம் ரூ. 1725 ரூபாய். உயர்த்தப்பட்ட தொகை ரூ. 595, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்பட்டிருக்கிறது, இது 53 சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. 500 யூனிட் – 600 யூனிட் வரை வீட்டிற்கு நீங்கள் மின்சாரத்தை பயன்படுத்தினால் 1000 ரூபாய் கட்டினால் இப்போது, இப்போது 1500 ரூபாய் கட்ட வேண்டும், 600 யூனிட் பயன்படுத்துபவர்கள் ரூ.2446 அண்ணா திமுக ஆட்சியில் கட்டணம் செலுத்த வேண்டும், திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு 2756, உயர்த்தப்பட்டது 310, 13%.
700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு ரூ.3110 அப்போது கட்டினால் போதும், இப்போது, 3620 ரூபாய் கட்ட வேண்டும். 550 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது, 18 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 3720 ரூபாய் அம்மாவுடைய அரசு இருக்கும்போது செலுத்திக் கொண்டிருந்தீர்க. இப்போது ரூ.4550 செலுத்த வேண்டும், 790 கூடுதலாக செலுத்த வேண்டும் 21% உயர்ந்து இருக்கிறது. 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 4,420 அண்ணா திமுக ஆட்சியில் கட்டணம் செலுத்த வேண்டும், இப்போது 5,550 கட்டணம் செலுத்த வேண்டும், உயர்த்தப்பட்ட தொகை 2130, 26% உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் ஒன்றும் அதிகமாக உயர்த்தவில்லை, கொஞ்சமாக தான் உயர்த்திருக்கிறோம் என்கிறார். 53 சதவிகிதம், 26 சதவீதம், 36 சதவீதம், 26 சதவீதம் எல்லாம் குறைந்த சதவிகிதமா ? எண்ணிப் பாருங்கள். எவ்வளவு சதவீதத்தை உயர்த்தி இருக்கிறார்கள் என்று… அதோட சராசரியாக பார்த்தால் 36 சதவீதம் உயர்ந்து இருக்கிறது, ஆண்டுக்கு ஒவ்வொரு வருடமும் 53 சதவிகிதம் உயர்த்தப்பட்டால்,
அடுத்த வருடம் 6 சதவீதத்தை கூட்டி 59 %ஆக உயர்த்துவார்கள். அதற்கு அடுத்த வருடம் 65%, அடுத்து வருடம் 6 சதவீதத்தை உயர்த்தினால் 71%. ஆண்டுக்கு 6 சதவீதம் மின்கட்டண உயர்வு உயர்த்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு ஒழுங்குமுறை மின்சார வாரியம் அனுமதி கொடுத்துவிட்டது. இதோடு நிற்கவில்லை வருட வருடம் மின்கட்டணம், வீடுகளுக்கு பயன்படுத்துகின்ற மின்சாரத்தினுடைய கட்டணம் ஒவ்வொரு வருடம் 6% உயர்ந்து கொண்டே போகும் என பேசினார்.