Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன பையனுக்கும் தெரியும்….! PM மோடிக்கு தெரில… ஏதும் பேசணும்னு பேசாதீங்க… பாஜகவை கடுப்பாக்கிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காந்தி படத்தை வைத்து அப்படியே போலி துப்பாக்கி வைத்து சுட்டு, செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்தியது உங்களிடம் இருக்கா? இல்லையென்றால் அந்த காணொளியை நான் அனுப்பட்டா ? காந்தி பொதுவானவர் என்றால் சவர்க்கர் எதுக்கு வருகிறார், எங்கிருந்து வருகிறார் ? காந்தியும் சவர்க்கரும் ஒண்ணா ? கோழையை வீர சவர்க்கர்  என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் எப்படி காந்தியை பற்றி பேசுகிறீர்கள் ? காந்தி பொதுவானவர் என்றால்,  நீங்கள் எதற்கு  வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்தீர்கள்?  3000 கோடியில் எதற்கு வைத்தீர்கள் ? இந்தியாவின் அடையாளம் காந்தியும், அண்ணல் அம்பேத்கரும் தான், இது சாதாரண பையனுக்கு தெரியும்.  நாட்டின் பிரதமருக்கு தெரியவில்லை,  பிஜேபிக்கு தெரியவில்லை.

இந்தியாவை தாண்டி வல்லபாய் பட்டேலை யாருக்கு தெரியும் ?  எதற்காக அவருக்கு நீங்கள் சிலை வைத்தீர்கள். காந்தியை சுட்டதற்கு தடை. ஆர்எஸ்எஸ்_யை தடை செய்து வைத்திருந்தார்கள். அந்த தடையை 16 மாதங்களில் நீக்கி கொடுத்தார் வல்லபாய் பட்டேல்.  அதற்கு நன்றி கடனாக நீங்கள் சிலை வைத்தீர்கள். கரு. நாகராஜன் எல்லாம் யாருக்காக கட்சி நடத்துகிறார்கள் ? மதத்துக்காகவா ? எதற்காக ? ஏதோ பேச வேண்டும் என்பதற்காக பேசுவார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |