இந்தியாவில் இஸ்லாமிய பெண்ணும் அவரின் குழந்தையும் இந்துக்களால் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டுகின்றனர் என கூறி ஒரு வீடியோ வைரல் ஆன நிலையில் அதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆரிப் என்ற முன்னாள் ராணுவ வீரர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் பெண்ணும், குழந்தையும் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கும் காட்சி இடம் பெற்றிருந்தன.
முகமது அந்த பதிவில் இந்தியாவில் இஸ்லாமியர்களை இந்துக்கள் உயிரோடு புதைக்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார். மேலும் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்ட பிரித்தானிய MP-யும் இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார்.
ஆனால் முகமது ஆரிப் தவறான கருத்தை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ குறித்த உண்மை தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் உள்ள பெண்ணையும் குழந்தையும் அப்பெண்ணின் கணவர் தான் கொன்று புதைத்துள்ளார்.
பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் இந்த செயலை அவர் செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கணவன் தப்பி ஓடி விடவே, ஊர் பொதுமக்கள் சடலத்தை மண்ணில் இருந்து வெளியில் எடுத்தது தெரிய வந்துள்ளது.
https://twitter.com/marifthahim/status/1233772232297631744