Categories
தேசிய செய்திகள்

SHOK NEWS: வகுப்பறையில் ஆசிரியர் செய்த செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்திரபிரதேசம் ஹத்ராஸ் எனும் இடத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக சைலேந்திரா சிங் கவுதம் பணிபுரிந்து வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சமயத்தில் மது பாட்டிலை உடன் வைத்திருந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது. அந்த காட்சிகளில் தன் இருக்கையின் பின்பும், மேஜையின் கீழேயும் மது பாட்டில்களை சைலேந்திரா சிங் கவுதம் வைத்திருந்தார்.

இதையடுத்து டெல்லி மகளிர் ஆணைய தலைவரும், சமூக ஆர்வலருமான ஸ்வாதி மாலிவால் இச்சம்பவத்தின் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உத்திரபிரதேச காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து சைலேந்திரா சிங் கவுதமை அம்மாநில கல்வித்துறை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. குற்றச்சாட்டு தொடர்பாக 3 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |