Categories
உலக செய்திகள்

போட்டியிட்ட 300 வேட்பாளர்கள்…. ஆர்வமுடன் மக்கள் வாக்களிப்பு…. கத்தாரில் நடைபெற்ற தேர்தல்….!!

ஷூரா அமைப்புக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று கத்தாரில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் ஷூரா அமைப்பு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் 45 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் மூன்றில் இரண்டு பங்கு பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். இந்த தேர்தலில் சுமார் 300 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

குறிப்பாக சட்டங்களை தோற்றுவித்தல், பட்ஜெட்களை அங்கீகாரம் செய்தல், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தல் போன்ற நடவடிக்கைகளை ஷூரா அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் தலையிடுவதற்கு இந்த அமைப்பிற்கு அதிகாரம் கிடையாது.

அதிலும் ஷூரா அமைப்பு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் முறையானது கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இதனை அதிகாரிகள்  செயல்படுத்தாமலே வைத்திருந்துள்ளனர். குறிப்பாக வரும் 2022 ஆம் ஆண்டு கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ளது. இதற்கிடையில் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |