அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் கப்பல்களை சுட்டு தள்ளுங்கள் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/realDonaldTrump/status/1252932181447630848
டிரம்பின் இந்த கருத்து ஈரானுக்கு எச்சரிக்கை என பென்டகனின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அமெரிக்காவின் ராணுவம் தங்களது விதிகளை மாற்றுவதற்கு மாறாக தங்களின் தற்காப்பு உரிமைகளுக்கு தொடர்ந்து கட்டுப்பட்டு நடப்பார்கள் என்று பரிந்துரைத்துள்ளனர்.