விக்ரம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் ”விக்ரம்”. கோவையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#ACTION from the sets of VIKRAM#Vikram_release_onsummer2022 #Vikram #KamalHaasan @ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil pic.twitter.com/9cWlmshrbb
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 22, 2021