சேலம் மாவட்டத்தில் சாலையோர கடைகளை பிரித்தெடுத்து சேதப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் திரண்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 50 க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக சாலையோரம் கடைகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் யாரும் கடைகள் திறக்கவில்லை. ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் 10 க்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்கு சென்று சாலையோர கடைகளை பிரித்தெடுத்து சேதப்படுத்தியுள்ளனர்.
அப்போது அதனை தட்டிக் கேட்ட பெண்களை இழிவாக பேசியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மாநகாராட்சி அலுவலகத்திற்கு சென்று மாநகராட்சி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளனர்.