Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய உரிமையாளர்…. திடீர் சோதனையில் போலீஸ்….!!

குளிர்பான கடையில் வைத்து மது பாக்கெட்டுகள் விற்பனை செய்த கடை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்றம்பள்ளி பகுதி காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்னம் மற்றும் காவல்துறையினர் சோமநாயக்கன்பட்டி-தொம்மசிமேடு பகுதியில் இருக்கின்ற குளிர்பான கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்நேரம் கர்நாடகா மாநிலத்தின் மதுபாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் கடையில் வைத்திருந்த 118 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கடை உரிமையாளரான ஜான்பாஷா என்பவரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |