வாழ்வாதாரத்தை இழந்து தவிர்ப்பதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பேருந்து நிலைய பகுதிகளில் இருக்கும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
இதனால் கடையில் இருக்கும் பழங்கள், கூல்ட்ரிங்ஸ், தின்பண்டங்கள், பூக்கள் போன்ற அனைத்து பொருட்களும் வீணாவது. இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடை உரிமையாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே நகராட்சி நிர்வாகம் கடைகளுக்கான வாடகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கடைக்காரர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கடை உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.