இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் ராஜினாமா செய்யக்கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை இதற்கு முன்பு வரை இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது. எனவே, கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து நாடு முழுக்க இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
இதற்கு கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கி பணியாளர்களும், சுகாதார அமைப்பினரும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இலங்கை அரசு பதவி விலகவில்லை எனில் வரும் 11 ஆம் தேதியிலிருந்து கடையடைப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடக்கும் என்று ஆர்பாட்டக்கார்கள் கூறியிருக்கிறார்கள்.