Categories
மாநில செய்திகள்

இரவு 10 மணி வரை கடைகள் செயல்படலாம்… எவைகளுக்கெல்லாம் அனுமதி?

இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆக.23 முதல் இரவு 10மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (23ஆம் தேதி) காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடையும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் மேலும் நீட்டிப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தினார்..

இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது..

எவைகளுக்கெல்லாம் அனுமதி :

இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட கடைகள் ஆக.23 முதல் இரவு 10மணி வரை செயல்பட அனுமதி.

செப்.1 முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.  அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சி முறையில் செயல்படவும் அனுமதி.

கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி. தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி.

ஆக.23ம் தேதி முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதி.

செப்.1 முதல் அங்கன்வாடி மையங்கள், மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி.

தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |