ஜெர்மனியில் சில கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு வாடிக்கையாளர் கூட வராத சூழல் உருவாகியுள்ளது
ஜெர்மனியில் சில கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஒருவரும் வராத சூழல் உருவாகியுள்ளது. இப்போது கடைக்கு சென்றால் லாபம் பெறலாம் என்ற எண்ணம் போய் பாதுகாப்பே முக்கியம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
திங்கள்கிழமை முதல் சிறு வர்த்தகங்கள் சிலவை இயங்குவதற்கு அனுமதி அளித்த ஜெர்மனி சமூக விலகல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்தை முறைப்படி பின்பற்றி வந்தால் அவை எப்போதும் போல் இயங்கலாம் என தெரிவித்திருந்தது. புத்தக கடைகள், கார். பைக் டீலர்கள் மரச்சாமான் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
கடைகள் திறந்திருந்தும் ஒரு கடை முன் கூட வரிசைகளை காணமுடியவில்லை. பொருளாதார நிலை சரியாக இல்லாத நிலையில் மக்கள் பணம் செலவழிக்க யோசிப்பதே இதற்கு முக்கிய காரணம். மற்றவர்கள் கடைக்கு செல்கிறார்களா அவர்களுக்கு ஏதாவது ஆகிறதா ஒன்றும் ஆகவில்லை என்றால் நாம் போகலாம் என்று நினைக்கும் மனித எண்ணமும் தான் மற்றொரு காரணம் என உளவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.