மனிதராய்ப் பிறந்த அனைவரும் குறுக்கு வழியை தேர்ந்தெடுத்ததற்கான வழிமுறைகள் மற்றும் காரணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சோம்பேறித்தனம் என்ற ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒரு வேலையை நினைத்த நேரத்தில் நினைத்த மாதிரி முடித்து விட நமக்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும், அதில் எது மிகவும் எளிதோ அதைத்தான் தேடுவோம். ஏண்டா இப்படி சோம்பேறியாய் இருக்கன்னு கேட்டா ஸ்மார்ட் வொர்க்னு சொல்லுவானுங்க. அனைத்தையும் சுலபமாய் முடித்திட வேண்டும் என்ற எண்ணமே இங்கு லஞ்சம் பிறந்திட காரணமானது.
சிறுவயதில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குச் செல்ல குறுக்கு வழியை தேடுவது போல, இன்று பலர் ஒரே இரவில் வெற்றி அடைய குறுக்கு வழியை தேடித் திரிகிறார்கள். 11, 12 படித்த டிஃபரண்டியல் கல்குலஸ் இன்றுவரை எங்கே நாம் பயன்படுத்துகிறோம் என்று தெரியவில்லை.
ஆனால் என்றோ படித்த வாய்ப்பாட்டை இன்னும் நாம் வாழ்க்கையில் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். மனப்பாடம் செய்ய நாம் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா! எழுதாத இம்போஷிஷன் இல்லை. இப்படி எதுவுமே முடியாமல் போன தருணத்தில் தான் முதல் முறையாக குறுக்கு வழியை தேடியது மனிதனின் எண்ணம். உதாரணமாக 9 ஆம் வாய்ப்பாட்டை மேலிருந்து கீழ் 0 to 9 பின் கீழிருந்து மேல் 9 to 0 என பின்னோக்கி எழுதினால் வாய்ப்பாடு தாயார்.
நம்மை பொருத்தவரை ஒன்றை செய்து முடிக்க வேண்டும் அவ்வளவுதான். இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். எதை செய்தாலும் அதற்கான நேரத்தை ஒதுக்கி உண்மையாக உழைத்தால் மட்டுமே நாம் செல்லும் வழி பிறக்கும். இது வெறும் வாய்ப்பாட்டு பற்றிய பதிவல்ல நம் வாழ்க்கைக்கு தேவையான பதிவு.