ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டம் இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து பயங்கர வாதிகள் பதுங்கியிருந்த அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்க்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் விதமாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தார். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்டர்நெட் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.