நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி,வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அம்மா உணவகங்களில் நாள்தோறும் தரமான உணவுகளை தடையின்றி வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநில அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல் அளித்துள்ளார்.
நேற்று, தமிழ்நாட்டில் உள்ள அம்மா உணவகம் தனித்துவத்துடன் செயல்படுகிறது என மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் 140.38 லட்சம் இட்லி, 53.24 லட்சம் கலவை சாதம், 37.85 சப்பாத்தி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து முதியவர்கள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தற்போது அம்மா உணவகங்களை நோக்கி வரத்தொடங்கியுள்ளனர்.
மொத்தமாக 85 லட்சம் மக்கள் அம்மா உணவகத்தின் மூலம் பயனடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற்று கூட்டத்தில் அம்மா உணவகங்களில் தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.