Categories
மாநில செய்திகள்

“கோயம்பேடு சந்தை திறக்க வேண்டும்”…3 நாட்கள் கடையடைப்பு… போராட்டத்தில் வணிக சங்கத்தினர்…!!

கோயம்பேடு சந்தைகளை திறக்க கோரி மூன்று நாட்கள் போராட்டம் நடைபெறும் என வணிகர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக கோயம்பேடு சந்தை நான்கு மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டு திருமழிசை தற்காலிக சந்தையாக மாற்றப்பட்டு நடந்து வந்த நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறந்து வைக்க வலியுறுத்தி வந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று கோயம்பேட்டில் இருக்கும் குறுங்காலீஸ்வரர் கோயிலில் கோயம்பேடு சந்தையைத் திறக்க கோரிக்கை மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடத்தி வந்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தியாகராஜன், தமிழகம்  முழுவதும் வரும் 27,28,29 ஆகிய மூன்று தேதிகள் கடை அடைப்பு நடத்த கோயம்பேடு காய்கறி சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் வணிகர் சங்க பேரமைப்புடன் ஆலோசித்து இருப்பதாக தெரிவித்தார்.

Categories

Tech |