Categories
மாநில செய்திகள்

“மக்கள் மட்டும்தான் ஹெல்மெட் போடணுமா”… தமிழக போலீசுக்கு பறந்த உத்தரவு…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 10% பேர் மட்டும் தான் ஹெல்மெட் அணிவதாகவும் போலீசார் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக கிராமப்புறங்களில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பொதுமக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கும் காவலர்களே ஹெல்மெட் அணிவதில்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளது. இதன் காரணமாக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதன்படி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரித்ததோடு ஹெல்மெட் அணியாமல் வரும் காவலர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

அதோடு சம்பந்தப்பட்ட காவலர்கள் ஹெல்மெட் வாங்கி வந்து அதை காண்பித்த பிறகு தான்  அவர்களுடைய வாகனத்தை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருவதோடு காவல்துறை என்ற ஒரே ஒரு காரணத்தை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

Categories

Tech |