Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழன மதிக்க கத்துக்கோங்க”…. நாங்க தடை போட்டா சும்மா விடுவீங்களா…. வாரிசு சிக்கலால் கொந்தளித்த பிரபல நடிகர்…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு மட்டும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், மீதமுள்ள தியேட்டர்கள் மட்டும்தான் டப்பிங் படங்களுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனால் தெலுங்கில் வாரிசு படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள பல பிரபலங்களும் கொந்தளித்துள்ளனர். அந்த வகையில் இயக்குனர் பேரரசு, சீமான், லிங்குசாமி என பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஐயப்பன் படத்திற்கு டப்பிங் பேச வந்த கஞ்சா கருப்பு வாரிசு படத்தின் ரிலீஸில் இருக்கும் சிக்கல் குறித்து பேசிய வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ‌ அவர் வீடியோவில் கூறியதாவது, உங்க படம் மட்டும் எந்த பிரச்சனையும் இல்லாம இங்க ஓடணும்.

ஆனா எங்க தளபதி விஜய் படம் மட்டும் ஓட கூடாதா. தளபதி படம் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகும். நீங்க மட்டும் தமிழகத்தில் படத்தை ரிலீஸ் பண்ணி காசு பார்க்கலாம். நாங்க மட்டும் ரிலீஸ் பண்ண கூடாதா. ‌ இதே நாங்க தெலுங்கு படங்களுக்கு  தடை போட்டு இருந்தா உங்களுக்கு எப்படி இருக்கும். சும்மா விடுவீங்களா. தமிழனா தமிழனா மதிக்க கத்துக்கோங்க. வாரிசு படம் தெலுங்கில் ரிலீஸ் ஆனால்தான் மகிழ்ச்சி. எனவே மரியாதையா வாரிசு படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிருங்க என்று ஆவேசமாக கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/my_Kollywood/status/1594283493877772289?s=20&t=KitgJ-a6GalVAD46sXntnA ‌

Categories

Tech |