Categories
உலக செய்திகள்

தமிழக மாணவிக்கு கத்திக்குத்து…… பெற்றோர்கள் கனடா செல்ல நடவடிக்கை…. அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி….!!

கனடாவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட தமிழக மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தின் குன்னுர் பகுதியை சேர்ந்த  ராச்சல் ஆல்பர்ட் என்பவர் கனடாவில் யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பை பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு பல்கலைக்கழகம்  அருகே நடந்த வழிப்பறியில் ராச்சலை வழி மறித்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தியதில் மாணவி படுகாயம் அடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர்  தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களிடம் மாணவியின் உறவினர்கள்  வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், மாணவியின் பெற்றோர் கனடா செல்ல விசா வழங்குமாறும், தேவையான உதவிகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.

Categories

Tech |