Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி காட்டுங்க…. இப்படி காட்டுங்க…. பயம் காட்டாதீங்க…. துரைமுருகன் பேச்சு …!!

கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து பேரவையில் நடந்த விவாதத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், கொரோனா பாதிப்பு குறித்து அரசு தான் பீதியை கிளப்புகிறது. போன் செய்தால் இரும்முகின்றார்கள். சட்டமன்றம் வந்தால் வெளியே உள்ள ஊழியர்கள் கையை சுத்தம் செய்ய இப்படி காட்டுங்க, அப்படி காட்டுங்க என்று பயமுறுத்துகின்றனர்.

இதற்கு பேரவையில் பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. துரைமுருகன் 70 வயதுக்கு மேல் ஆனவர் என்பதால் அச்சம் கொள்கிறார் என்று தெரிவித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

தொடர்ந்து சபாநாயகர் தனபால் பேசும் போது , சட்ட பேரவையில் ஏசி குறைக்கப்பட்டு ,  கிருமிநாசினி  தெளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தேவைப்படும் போது மாஸ்க் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |