தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் காட்சிகளில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேமுதிக கட்சி அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்த இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதிமுக தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த தேமுதிகவினர் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து விஜயகாந்தின் மகன் 234 தொகுதியிலும் தனியாக நின்று ஜெயிப்போம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இநிலையில் பிரேமலதா விஜயகாந்த் ஒவ்வொரு தொகுதிகளாக சென்று பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் எல்லோருக்கும் ஆல்பாஸ் செய்வது போல எங்களையும் ஆல் பாஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்கு பிரேமலதா விஜயகாந்த் “ஒழுங்கா படிச்சு எக்ஸாம் பாஸ் பண்ணு, உதை வாங்குவ” என்று சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இதனால் அங்கு கலகலப்பு ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்வு எழுதாமலேயே பாஸ் செய்வதால் தங்களுக்கும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தில் மாணவன் பேசி இருப்பதாக பலரும் கூறியுள்ளனர்.