வெப்பச்சலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி , கரூர், சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என்றும் சென்னையில் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தகவல் அளித்துள்ளது.