Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஷோரூமில் நுழைந்த மர்மநபர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் ஷோரூமில் பணம் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாரில் மதுரை மெயின் சாலையில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. அங்கு மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து ஷோரூம் உரிமையாளர் சத்திரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஜெபசிங் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷோரூம் சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் மோட்டார்சைக்கிள் ஷோரூமில் பணம் திருடியது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு பகுதியில் வசிக்கும் தமிழ்வாணன் என்பது காவல்துறையினர் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தமிழ்வாணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |