Categories
சினிமா தமிழ் சினிமா

இன்பத் செய்தியை வெளியிட்டுள்ள ஸ்ரேயா கோஷல்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற இன்ப செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்திய மொழி அனைத்திலும் பாடி ரசிகர்களின் மனதை தன் குரலால் ஈர்த்தவர் ஸ்ரேயா கோஷல். இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஷிலாதித்தை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் ஸ்ரேயா கோஷல் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் பாடி வந்தார்.

பாடகி ஸ்ரேயா கோஷல் வீட்டில் நடந்த விசேஷம்

இந்நிலையில் அவர் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்ற இன்ப செய்தியை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு அழகிய புகைப்படம் ஒன்றை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ஸ்ரேயா கோஷலுக்கு ரசிகர்களும், பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Categories

Tech |