Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

”இறால் பெப்பர் நூடுல்ஸ்” உடனே செய்யுங்க…. குடும்பத்தோட சாப்பிடுங்க…!!

தேவையான பொருட்கள்.

நூடுல்ஸ் -200 கிராம்,

இறால் 200 கிராம்,

முட்டை 4,

மிளகுத்தூள் அரை ஸ்பூன்,

வெங்காயம்-2,

கேரட் 2,

கோஸ் 100 கிராம்,

பீன்ஸ் 100 கிராம்,

பச்சைமிளகாய் 2,

இஞ்சி பூண்டு விழுது 5 ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

இறால் பெப்பர் லபெல்ஸ் செய்வதற்கு முதலில் மேகியை சூடான நீரில் போட்டு வேக வைத்து, அதில் உள்ள நீரை வடித்து, குளிர்ந்த நீரில் போட்டு எடுத்து, அதில் எண்ணெய் தடவி வைக்கவும். பிறகு முட்டையில் உப்பு , மிளகு சேர்த்து அடித்து பொடிமாஸ் போல் வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் பச்சை மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி , பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு இறால் மற்றும் மேகி மசாலா சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகள் வகைகள், உப்பு சேர்த்து வேக வைக்கவும். இப்போது சுவையான இறால் நூடுல்ஸ் தயார்.

Categories

Tech |