கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் புதிய செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய செல்போன் கடையை திறந்து வைத்து, 1+ செல்போனின் புதிய மாடலை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி ஹாசன், கோவை எப்போதும் வளர்ச்சியான நகரம் என தான் நினைப்பதாகவும், கோவை வரும்போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். நடிகர் ரஜினி, கமல் இணைப்பு குறித்தும், அரசியல் பற்றிய எவ்விதமான கருத்தும் தனக்கு இல்லை எனவும், அப்பா கமல்ஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுப்பேன் எனவும் கூறினார். மேலும் வருங்காலத்தில் படங்களுக்கு இசை அமைக்க திட்டம் உள்ளதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.