ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருப்பதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஆன்லைன் மோசடி மற்றும் ஏடிஎம் அட்டை மோசடியில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களின் பயம், ஆசை என இரண்டு அம்சங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். சிசிடிவி கேமரா பொருத்துவது மூலம் பல்வேறு குற்றங்களை கண்டறிய முடிந்தாலும், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவது கடினமாக இருக்கிறது.
மேலும் பேசிய அவர், ஆன்லைன் மோசடிகளை கண்டறிவதற்கான தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். படிக்காத பாமர மக்கள் மட்டுமின்றி படித்தவர்களும் ஆன்லைன் மோசடியில் ஏமாறுவது கவலை அளிப்பதாக கூறிய காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் வங்கி தரப்பில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் வங்கி கணக்கு வங்கி கணக்கு ஏடிஎம் என் தொடர்பான ரகசிய தகவல்களை கேட்கப்பட மாட்டாது என்றார்.