Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முகநூலில் பழகி கர்பமாக்கிய எஸ்.ஐ…. 18 மாதத்திற்கு பின் வழக்கு பதிவு …!!

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீது உயர்நீதிமன்ற உத்தரவின்படி 18 மாதங்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்ற காவல் உதவி ஆய்வாளர். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் முகநூல் மூலமாக பழகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் கருவுற்ற நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விவேக் ரவிராஜ்ஜிடம் வற்புறுத்தியுள்ளார். பின்னர் தனது தாய் மூலமா பெண்ணிடம் பேசிய விவேக் ரவிராஜ் கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக அப்பெண்ணிடம் உறுதி அளித்துள்ளார்.

தனிமையில் உல்லாசம்..! கர்ப்பமானதும் கொலை மிரட்டல்..! காவல்துறை அதிகாரி மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!

இதனை நம்பிய பெண் கருவை கலைத்த நிலையில், அதற்கு பின்னர் விவேக் ரவிராஜ் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது வழக்கு பதிவு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் விவேக் ரவிராஜ் மற்றும் அவரது தாயார் ராஜாத்தி மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Categories

Tech |